சிவகாசி வெடி ஆலையில் தொடர் காவு வாங்கும் படலம், இன்று ஒருவர் வெடி வெடித்ததில் உயிரிழந்தார்.

Published : Mar 04, 2020, 10:10 PM IST
சிவகாசி வெடி ஆலையில் தொடர் காவு வாங்கும் படலம், இன்று ஒருவர் வெடி வெடித்ததில் உயிரிழந்தார்.

சுருக்கம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில்  தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்கதையாகவே உள்ளது.

T.Balamurukan

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில்  தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்கதையாகவே உள்ளது.

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கணேசன் என்பவருக்கு சொந்தமான கே ஆர் எஸ் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் புதன்கிழமை மதியம் ஃபேன்சி ரக வெடிகளுக்கு மணி மருந்து கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கிய காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு தொழிலாளியான சின்ன முனியாண்டி என்பவரை சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து மாறனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!