டெல்லியின் எதிர்காலம் போச்சு... வெறுப்பும் வன்முறையும் அழிச்சிடுச்சு... நேரில் சென்று உருகிய ராகுல்!

By Asianet TamilFirst Published Mar 4, 2020, 10:15 PM IST
Highlights

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. குறிப்பாக இஸ்லாமியர்களின் உடைமைகள் குறி வைத்து தாக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

டெல்லியின் எதிர்காலமான பள்ளிக்கூடங்களை வெறுப்பும் வன்முறையும் சேர்ந்து அழித்துவிட்டன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. குறிப்பாக இஸ்லாமியர்களின் உடைமைகள் குறி வைத்து தாக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துவருகிறது.


இந்நிலையில் கலவரம் நடந்த பகுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். பின்னர் ராகுக் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். “டெல்லியின் எதிர்காலமான பள்ளிக்கூடங்களைக்கூட வெறுப்பும் வன்முறையும் சேர்ந்து அழித்துவிட்டன. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நற்பெயர் சிதைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கலவரத்தால் பாரத மாதாவுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு வன்முறையே எதிரி. இந்த நேரத்தில் மக்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன்.  அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

click me!