தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட சதி...! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Jun 07, 2018, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட சதி...! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுருக்கம்

Tuticorin gunfire planned plot - M.K.Stalin

தூத்துக்குடியில் போராட்டக்காரர்களைக் குறி வைத்து சுட்டது திட்டமிட்ட சதி என்றும், ஆள் மாறாட்டம் செய்து வேறு அதிகாரிகளை வைத்து துப்பாக்கிச்சூடு
நடத்தியிருக்கிறார்கள் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சடட்ப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து பேச அனுமதி மறுத்ததை அடுத்து, திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதன் பின்னர், மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து
சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திமுக வெளிநடப்பு செய்திருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தினத்தில் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் ஆள் மாறாட்டம் செய்து, வேறு அதிகாரிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி
படுகொலை செய்திருக்கிறார்கள். 13 பேர் கொல்லப்பட்டதற்கும், போராட்டத்துக்கு முன்னின்று நடத்தியவர்களை சுட்டதும் திட்டமிட்ட சதி.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்தான் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் பயனளிக்கப் போவதில்லை. இந்த கமிஷனே போலி கமிஷன். இதனை நாங்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே பேச அனுமதி கொடுத்துவிட்டு பேரவையில் பேச அனுமதிக்காமல் தடுத்து விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!