நெருக்கடியில் தள்ளப்படும் இந்திய வங்கிகள்…. செயல்படா சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது… இழுத்து மூட வேண்டியதுதான் பாக்கி !!

First Published Jun 7, 2018, 12:47 PM IST
Highlights
Heavy loss fpr indain banks waste of assets


நடப்பு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் 11.5 சதவிகிதமாக உயரும் என்று கிரிசில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2017 மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 8 லட்சம் கோடியாக இருந்தது. இது 2017-18 நிதியாண்டின் நிறைவில் 11.2 சதவிகித உயர்வுடன் ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.

அதுவே இந்த நிதியாண்டில், இன் னும் அதிகரித்து 11.5 சதவிகிதத்தை எட்டும் என்று கிரிசில் நிறுவனம் எச்சரித்துள்ளது.செயற்படா சொத்துகளின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய வங்கிகள் சென்ற நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பைச்சந்தித்திருந்தன.

அத்துடன் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வராக் கடன்களாக மாற்றின. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நிதியாண்டுகளில் வங்கிகளின் வராக்கடன் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம்கோடியாக உயர்ந்தது.

தற்போது இதுமேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.இதற்கிடையே, வராக்கடன் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி அரசு, 2018-ஆம் ஆண்டுக்கான மொத்த வராக் கடனில், 5-இல் ஒரு பங்கு வங்கிக் கடனை மீட்பதற்காக ‘வங்கி திவால் சட்டம்’ கொண்டு வருவதாகவும், வங்கித் துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், வருவாய் இழப்பைச் சந்தித்து வரும்பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கப் போகிறோம் என்றும் கண்துடைப்பு நடவடிக்கைகளை முன் வைத்தது.

அந்த வகையில், ஒட்டு மொத்தமாக ரூ. 21 ஆயிரத்து 646 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா,ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி ஆகிய நான்கு பொதுத்துறைவங்கிகளையும் ஒன்றிணைக்கும் வேலையில் தற்போது தீவிரமாகியுள்ளது.

click me!