ஆட்சியை கவிழ்க்க ஸ்கெட்ச் போட்ட செயல் தல... கட்டத்துக்குள் வந்து சிக்கும் தினா! எப்படி முறியடிப்பது என ப்ளான் போடும் எடப்பாடி & டீம்

First Published Jun 7, 2018, 12:14 PM IST
Highlights
Sketch to put the rule down mk stalin


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துதான் இரட்டைக்குழல் துப்பாக்கியும் காத்திருக்கிறார். செயல் தல காத்திருக்கிறார். தினாவும் காத்திருக்கிறார். எப்படியும் இன்று தீர்ப்பு வந்துவிடும் என்று தான் செயல் தலயிடம் கழகத்தினர் சொல்லிவந்தார்கள். ஆனால், இன்று தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்த வாரத்தில்தான் தீர்ப்பு வரும் என்று சட்ட நிபுணர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

செயல் தலயை பொறுத்தவரை, எப்படியும் தீர்ப்பு 18 பேரின் எம்.எல்.ஏ.க்களின் பதவியைக் காப்பாற்றிவிடும்; அதையடுத்து உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடியார் ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான் ப்ளான். அதற்கான ஒவ்வொரு காயாக செயல் தல தரப்பினர்

நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எடப்பாடியார் ஆட்சியில் இருக்கிறார். இந்தத் தீர்ப்புதான் அவரை வீழ்த்த நல்ல ஆயுதம் என்று செயல் தல தரப்பினர் தினா தரப்பினரிடம் பேசியிருக்கின்றனர். அந்த அடிப்படையில் திமுக பக்கா ஸ்கெட்ச் போட்டு வருகிறது.

அதனால், தினா தரப்பிடம் இப்போது இருக்கும் 18 பேரை தக்க வைத்துக்கொள்ள தினாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யவும் திமுக ரெடியாகத்தான் இருக்கிறது. இதுபற்றி தினாவுக்கும் செயல் தல தரப்பினர் சொல்லிவிட்டார்களாம். 18 பேர் தீர்ப்புக்கு முன்னதாகவோ பின்னதாகவோ செயல் தலயையும் தினாவையும் நேரடியாக சந்தித்துவிட வைத்து விட வேண்டும் என்று ஒரு முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் இரட்டைக்குழல் ஆட்சியை முடிவுக்குக்

கொண்டுவரவேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. சந்திப்புக்கான நேரம், இடம் இன்னும் முடிவாகவில்லை. அதை மிகவும் ரகசியமாக செய்ய வேண்டும் என இரண்டு தரப்புமே நினைக்கிறது. தினாவும் ஆட்சியை முடித்துவிட்டு தேர்தல் மூலம் தன்னை நிரூபிக்கும் மூடுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இது இப்படி இருக்க, சில நாட்களுக்கு முன் நடந்த அமமுக தலைமை அலுவலக திறப்பு விழாவில் தினாவின் பயங்கர விசுவாசிகளான வெற்றியும், தங்கமும் அட்டன் பன்னல. இதை வைத்து இன்னொரு வதந்தி பரவியது. ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது வெற்றி ஏற்கனவே திட்டமிட்ட ஃபாரின் ட்ரிப்பில்  இருப்பதாகவும், தங்கம் உடல் நலம் இன்றி கோவையில் ட்ரீட்மென்டில் இருப்பதாகவும் தெரியவந்தது. தனது எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூட கைநழுவிப் போய்விடக் கூடாது என்பதில் தினா தெளிவாக இருக்கிறார்.

click me!