
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல் அமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "கனவில் வந்த காவிரி ஆற்று நீரும், விஸ்வரூபம் எடுத்த விபரீதமும்!" என்ற தலைப்பில் அப்படி என்னடி பெரிய கனவு... கவுண்டமணி - செந்தில் கனவா? என கேள்வி பதில் வடிவில் அவர்களின் சந்திப்பை தாறுமாறாக கலாய்த்து தள்ளியுள்ளார்.