என்னோட பிஆர்ஓ அமைச்சர் ஜெயகுமார் !! டஃப் கொடுக்கும் கமல்ஹாசன்…

Asianet News Tamil  
Published : Jun 07, 2018, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
என்னோட பிஆர்ஓ அமைச்சர் ஜெயகுமார் !! டஃப் கொடுக்கும் கமல்ஹாசன்…

சுருக்கம்

My PRO minister Jayakumar told kamal hassan

அமைச்சர் ஜெயகுமார் என்னுடைய பிஆர்ஓவாக இருந்து கொண்டு என்னோட புகழை நன்றாக பரப்பட்டும் என்று செமையாக கலாய்த்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை அரசியலுக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், டி.டி.வி.தினகரன் என அனைவர் குறித்தும் போல்ட்டாக கருத்து சொல்பவர் அமைச்சர் ஜெயகுமார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், அரசை விமர்சனம் செய்பவர்கள் குறித்தும் பக்காவாக பதில் அளிப்பவர் அமைச்சர் ஜெயகுமார்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாராசாமியை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன்,  நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல. நான் கோடியில் ஒருவன். 7½ கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என தெரிவித்தார்.

அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. டுவிட்டரில் பதில் சொல்லி அலுத்துவிட்டேன். இப்போது என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள் ஜெயகுமார்என குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜெயகுமார்  என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக அதாவது பிஆர்ஓ வாக  இருந்துகொண்டு, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும் என்று கடும் டஃப் கொடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!