
அரசு அதிகாரிகளை விட, பாலியல் தொழிலாளர்கள் மேலானவர்கள் என்று, உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார்.
எதையாவது பேசி வாங்கி கட்டிக் கொள்வதில் பாஜக-வினரை மிஞ்சுவதற்கு ஆளில்லை. இவ்விஷயத்தில் அந்தகட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை யாரும் விதிவிலக்கில்லை.
இவர்களில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகஎம்எல்ஏ சுரேந்திர சிங் முக்கியமானவர். .யாரையும் இழிவாக பேசுவது இவரின் வழக்கமாகி விட்டது. ‘அரசு அதிகாரிகள் தங்களது பணியை செய்ய மறுத்தால், ஒருகுத்து விட்டு பாடம் புகட்டுங்கள்;அப்படியும் வேலையை செய்யவில்லை எனில் காலணிகளை கழற்றி அடியுங்கள்’ என்று அண்மையில் பேசியிருந்தார்.
இது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இந்த சர்ச்சை ஓயும் முன்பே, மீண்டும் அரசு ஊழியர்களை வம்பிழுத்துள்ளார் சுரேந்திர சிங். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கும் அவர், ‘அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழிலாளர்கள் மேலானவர்கள்; குறைந்தபட்சம் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு தங்களது பணியை செய்கிறார்கள்; மேடைகளிலும் ஆடுகிறார்கள்; ஆனால் இந்த அதிகாரிகள், பணம் வாங்கிய பின்பும் தங்களது பணியை செய்வதில்லை; எதற்காக செல்கிறோமோ அந்த வேலை முடியும் என்பதற்கும் உத்தரவாதம் இருப்பது இல்லை’ எனவிமர்சித்துள்ளார். இது தற்போதுமீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கடந்த மாதம், உத்தரப்பிரதேச அமைச்சர் சுகேல்தேவுடன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை ஒப்பிட்டு, ‘ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஒரு பாலியல் தொழிலாளி’ என்றும், ‘அவர் அவரது குடும்ப உறுப்பினர்களை அரசியலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கிறார்’ என்றும் மிக மோசமாக சுரேந்திரசிங் பேசியிருந்தார்.
பாஜக தோற்ற கோரக்பூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘2019 மக்களவை தேர்தல் இஸ் லாம் மற்றும் கிருஷ்ண பகவான் இடையேயான போராக இருக்கும்’ என்றும் சுரேந்திர சிங் வன்முறையைத் தூண்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.