காவிரி மேலாண்மை  ஆணையத்தின்  தலைவரை நியமித்தது மத்திய அரசு…. யார் தெரியுமா ?

Asianet News Tamil  
Published : Jun 06, 2018, 11:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
காவிரி மேலாண்மை  ஆணையத்தின்  தலைவரை நியமித்தது மத்திய அரசு…. யார் தெரியுமா ?

சுருக்கம்

cauvery management commission chairman appointed

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இநத வாரம் நடக்க உள்ள நிலையில், இந்த ஆணையத்தின் புதிய தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் பிறப்பிட்ட உத்தரவை ஏற்று கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு  தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும் என்றும்  காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று  அந்த வரைவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டதையடுத்து, கடந்த 1-ம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது.

அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். . புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது..

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த வாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!