
கடந்த வருடம் இரண்டு பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்வு பெற்று இருந்த நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 1300 அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்தி இந்த வெற்றியை அடைந்து உள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநிலம் மற்றும் மத்திய பாடங்களில் மாநிலத்தில் யாரு முதல் யாரு ரெண்டு என்றெல்லாம் இருந்ததை மாற்றி கிரேடு முறையில் கொண்டு வந்ததின் விளைவுகளாலும், தோல்வியுறும் மாணவர்கள் அதே கல்வி ஆண்டில் பயில ஏதுவாக தவறிய பாடங்களில் உடனடியாக தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கி அந்த மாணவர்களையும் சம நிலை படுத்தி, பல இன்னல்களையும் மாணவர்கள் இடையே உள்ள தாழ்வு மனபான்மையை அகற்றி பெற்றோர்களுக்கு ஒர் நிம்மதியை கொடுத்துள்ளார்.
மேலும் ` நான் மருத்துவம் படித்து டாக்டர் ஆகி ஏழைகளுக்கு இலவச சேவை செய்வேன் எனும் புளித்து போன டயலாக்கை மீடியாக்களும் தாம் பயின்ற பள்ளிக்கு விளம்பரம் தேடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி உள்ளார்.
மத்திய பாட திட்டத்திற்கு நிகராக மாநில பாடங்களை திருத்தியமைக்கப்பட்ட பாட புத்தகங்கள் எளிமையாகவும் டவுன்லோட் செய்யும் விதத்திலும் வடிவமைக்க பட்டு பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க பட்டும் உள்ளது. உண்மையில் இவருடைய செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியவை தான்....
நீட் , ல் வட இந்தியர்களில் சாதிக்கும் போது நம் மாணவர்களால் ஏண் சாதிக்க முடியாது..?
கலைஞர் & ஜெ வால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி மோசமானது ஆகும்...
முக்கியமான தகவல் என்னவெண்றால் இவர் இந்த கல்வி துறைக்கு
வந்து ஓர் ஆண்டுகள் ஆறு மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 11 வகுப்பு பாடத்தில் 49 மதிப்பெண்கள் கேட்டனர். நம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் +2 வகுப்புக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்ததாலும். +1 யாரும் முக்கியதுவம் கொடுக்கவில்லை இதனால் தான். நீட்டில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்த செயல்முறைகளை மாற்ற +1 தேர்விலும் puplic தேர்வே கொண்டு வந்தார், +1 = 600 மதிப்பெண் , +2 = 600 மதிப்பெண்.
மேலும் நீட் என்னும் மருத்துவ தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக
பாடதிட்டங்கள் CBSE க்கு இணையாக மாற்றியுள்ளார் 6, 9, 11 வகுப்புகளில் இந்த 2018 ஆண்டும், 7,8,10,12 அடுத்த 2019 ம்ஆண்டும் பாடதிட்டங்களை மாற்றியுள்ளார் அதில் முழு வெற்றியடைய இன்னும் 1 அல்லது 2 ஆண்டு
காத்திருக்க வேண்டும்.
இன்னும் பள்ளி கல்வி துறையில் பல மாற்றங்களும் தனியார் பள்ளிகளிகளின் முறையற்ற கல்வி கட்டணத்தை சீர் படுத்தி கல்வியில் ஓர் புரட்சி செய்வார் என பலரும் கருத்து கூறுகின்றனர். அதேநேரத்தில் தான் உண்டு, தான் வகிக்கும் துறை உண்டு என பல மாற்றங்களை செய்யும் செங்கோட்டயனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.