’இரட்டை இலை இருக்குமிடத்தில் நான் இருப்பேன்’ - ஒரே போடாய் போட்ட டிடிவி தரப்பு எம்.பி...!

 
Published : Nov 27, 2017, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
’இரட்டை இலை இருக்குமிடத்தில் நான் இருப்பேன்’ - ஒரே போடாய் போட்ட டிடிவி தரப்பு எம்.பி...!

சுருக்கம்

ttv supporter Vijay Sathyanand said that I will be where the double leaf

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என டிடிவி ஆதரவாளராக இருந்த விஜிலா சத்யானந்த் எம்.பி. தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான். 

இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர். 

ஆனால் எடப்பாடி அணியே வெற்றி பெற்று இரட்டை இலையை கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். எடப்பாடி தரப்பில் இன்னும் யார் என்று முடிவாகவில்லை. 

இந்நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

இதைதொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த விஜிலா சத்யானந்த், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!