பழனிசாமியைப் பதற வைத்த மத்திய புலனாய்வுத்துறை ரிப்போர்ட் !! வாக்குகளைப் பிரித்து கெத்து காட்டும் டி.டி.வி. !!

Published : Apr 08, 2019, 07:30 PM IST
பழனிசாமியைப் பதற வைத்த மத்திய புலனாய்வுத்துறை ரிப்போர்ட் !!  வாக்குகளைப் பிரித்து கெத்து காட்டும் டி.டி.வி. !!

சுருக்கம்

மத்திய புலனாய்வுத்துறை அளித்துள்ள லேட்டஸ்ட் அறிக்கையில் அமமுக 5 லிருந்து 15 சதவீத அதிமுக வாக்குகளை பிரிக்கும் என்றும், இதனால் ஆளும்கட்சியின் வெற்றிக்கு பெரும் பங்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி  பழனிசாமி பதறிப்போயுள்ளார்.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது,

இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மெகா கூட்டணி போட்டியிடுகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக கூட்டணி அனைத்தையும் செய்து முடித்துவிட்டது.

தேர்தல் பிரச்சாரம், வாக்காளர் கவனிப்பு போன்றவற்றை அதிமுக தரப்பு கன கச்சிமாக செய்து முடித்திருந்தாலும் அதிமுகவும், பாஜகவும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்னும் பயந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் கடந்த வாரத்தில் மத்திய புலனாய்வுத்துறை மத்திய அரசுக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் அமமுக தீவிரமாக களம் இறங்கினால் அதிமுகவின் 5 முதல் 8 சதவீத வாக்குகளை பிரிக்கும் என்று தெரிவித்திருந்ததது.

ஆனால் தற்போதைய ரிப்போர்ட்டில் அமமுக 5 முதல் 15 சதவீத வாக்குகளை பிரித்து அதிமுகவின் வெற்றியை பெரிய அளவில் டேமேஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெக் ஆன அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் அவரசமாக பேசியிருக்கின்றனர்.

திமுகவுக்குத்தான் கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன் தற்போது அதிமுக கூட்டணியைத் தான் பெருமளவில் டேமேஜ் பண்ணுவார் என புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்துள்ளதால் பயந்து போன எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலக அதிகாரிகளையும் தன்னுடன் பிரச்சாரத்தின் போது அழைத்துச் சென்று  அட்வைஸ் கேட்பதாக தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!