முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு..! பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட எஸ்.ஐ...!

Published : Apr 08, 2019, 06:12 PM IST
முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு..! பெண்ணின்  கன்னத்தில் பளார் விட்ட எஸ்.ஐ...!

சுருக்கம்

முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த தருணத்தில் ஒரு பெண்ணுக்கும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு பெண்ணின் கன்னத்தை அறைந்துள்ளார் எஸ்.ஐ. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மயில்வேலு என்பவர் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதல்வர் பழனிசாமி அங்கு சென்றிருந்தார். பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக ஆட்டோவில் டிராபிக்கில் சிக்கி தவித்து வந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய ஆட்டோ மற்றும் மற்ற வாகனங்களை வேகமாக தட்டி தட்டி விரைவாக செல்லுங்கள் செல்லுங்கள் என சொல்லி வந்துள்ளார் எஸ்.ஐ. அப்போது சற்று கோபமான அந்தப் பெண் எப்படி வேகமாகச் செல்ல முடியும் இப்படி டிராஃபிக் இருக்கே என எதிராக பேசியதற்கு பளார் என அந்த பெண்ணின்  கன்னத்தில் அறைந்துள்ளார் எஸ்.ஐ முருகேசன். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!