’பாஜக தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரியாம்...’ புகழ்ந்து தள்ளிய தமிழிசை..!

Published : Apr 08, 2019, 04:58 PM ISTUpdated : Apr 08, 2019, 05:07 PM IST
’பாஜக தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரியாம்...’ புகழ்ந்து தள்ளிய தமிழிசை..!

சுருக்கம்

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மற்றும் தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  

இதனையடுத்து மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிட்டது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. 

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியான நிலையில், அதுகுறித்து தமிழிசை கூறுகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாஜக தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போன்று உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், "எந்த தலைவருடைய சிலை உடைக்கப்பட்டாலும் அது தவறுதான்; யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றார். 

நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவதால், அது குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவது தவறு. தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும் என்று தமிழிசை கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!