8 வழிச்சாலை... அடங்க மறுக்கும் அமைச்சர்... அதிருப்தியில் மக்கள்..!

Published : Apr 08, 2019, 05:37 PM IST
8 வழிச்சாலை... அடங்க மறுக்கும் அமைச்சர்... அதிருப்தியில் மக்கள்..!

சுருக்கம்

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது.  

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது.

சென்னை முதல் சேலம்யே 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன. இதற்கான நிலம் கையப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் அத்துமீறலை எதிர்த்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து பாமக அன்புமணி, திமுக உள்பட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்து. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி, சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்று உரிய முறையில் பெற வேண்டும் திட்டம் தொடர்பாக மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல, பாஜக தேசிய செயலாளரான இல.கணேசனும், இது தற்காலிக தடங்கல். தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக கருத்து தெரிவித்துள்ளதுன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!