மதுரை ஆதீனத்திற்கு எதற்கு இந்த வேலை... இவர் யாருக்கு ஏஜெண்ட்...? சூடான டிடிவி.தினகரன்..!

Published : Apr 01, 2019, 06:11 PM ISTUpdated : Apr 01, 2019, 06:16 PM IST
மதுரை ஆதீனத்திற்கு எதற்கு இந்த வேலை... இவர் யாருக்கு ஏஜெண்ட்...? சூடான டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என டிடிவி.தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும்  தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என டிடிவி.தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் 
தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 21-ம் தேதி கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதுரை ஆதீனம் அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைவது உறுதி என்றார். தினகரன் பண்பாளர் என்றும், மிகவும் பொறுமைசாலி என்று கூறினார். இதனை சுட்டிக்காட்டிய டிடிவி, ஆதீனம் சொல்லியிருப்பது ஆதாரமற்றது என்றார். அது உண்மையும் அல்ல; இணைப்பதற்கு அவசியமும் அல்ல என விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில், மீண்டும் அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் டிடிவி.தினகரன் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள் என்றார். யார், யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாது என்றும் தெரிவித்திருந்தார். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவி.தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் அமமுகவை இணைக்க எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜகவிடம் அடகுவைத்து அம்மாவை பழித்துப் பேசிய கட்சிகளுடன் தங்கள் சுயலாபத்துக்காக கண்டிக்க முடியாமல் யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இணைப்பு பேச்சு என ஆதீனம் பொய் சொல்வதை பார்த்தால் யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார் போல என விமர்சனம் செய்துள்ளார். இணைப்பு  பேச்சு உண்மை என்றால் அதைச் செய்வது யாரென்பதை வெளிப்படையாக கூறலாமே என டிடிவி.தினகரன் அறிக்கை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!