வார்டு எண் 35,36,37..! ஐடி ரெய்டில் ஆதாரத்தோடு சிக்கிய பணப்பை..! வேலூரில் பரபரப்பு..!

Published : Apr 01, 2019, 05:33 PM IST
வார்டு எண் 35,36,37..! ஐடி ரெய்டில் ஆதாரத்தோடு சிக்கிய பணப்பை..! வேலூரில் பரபரப்பு..!

சுருக்கம்

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பணம், வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை அடுக்கி வைத்துள்ள பைகளில்  சோதனை செய்த போது, வார்டு நம்பர்கள் எழுதப்பட்ட கவர்களோடு பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

கடந்த 2 நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் வீட்டில் தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மேலும் சூடு பிடித்து உள்ளது.சோதனையின் போது கிடைத்த சில விவரங்களை வைத்து, துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சொந்தமான வீடு மற்றும் சிமெண்ட் குடவுனில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப் பட்டது. 

மேலும், துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கல்லூரியில் மேற்கொண்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் மக்களுக்கு விநியோகம் செய்ய தான் இந்த பணம் பயன்படுத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில் மீண்டும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்துள்ளது வருமான வரித்துறை.

இதற்கிடையில், வார்டு எண்கள் எழுதப்பட்ட பண கட்டுகளை பையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு வருமான வரைத்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுமா அல்லது நிறுத்துவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!