சினம் கொண்ட சிங்கம் அதிமுக... மதம் கொண்ட யானை திமுக... ரவுசு காட்டும் ராஜேந்திர பாலாஜி..!

Published : Apr 01, 2019, 05:15 PM IST
சினம் கொண்ட சிங்கம் அதிமுக... மதம் கொண்ட யானை திமுக... ரவுசு காட்டும் ராஜேந்திர பாலாஜி..!

சுருக்கம்

மக்களவை தேர்தலில் சினம் கொண்ட சிங்கமான அதிமுக, மதம் கொண்ட யானை ஆன திமுகவை விரட்டியடிக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலில் சினம் கொண்ட சிங்கமான அதிமுக, மதம் கொண்ட யானை ஆன திமுகவை விரட்டியடிக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக கூட்டணியை பலவீனமான கூட்டணி என கூறும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தங்கள் கூட்டணியைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார். பாஜக போட்ட பிச்சையால் அதிமுக அரசு நீடிப்பதாக ப.சிதம்பரம் கூறுவதன் நோக்கம், இரு கட்சிகளிடையே மோதலை உருவாக்க நினைக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக - பாஜக இடையே ஒருமித்த கருத்து நிலவுவதாகவும், ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தலோடு மூடுவிழா கண்டுவிடும் என்றும் கூறினார். மேலும் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுக - பாமக கூட்டணியில் எந்தவித பேரமும் கிடையாது. 

இதனையடுத்து கொடநாடு விவகாரத்தில் முதல்வரை குறை சொன்ன ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு என்ன சொல்லப் போகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மையத்தில் வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?