சசிகலாவை சந்திக்க சேன்ஸ் இருக்கா? - தமிழகம் திரும்பும் 18 எம்.எல்.ஏக்கள்...!

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 05:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
சசிகலாவை சந்திக்க சேன்ஸ் இருக்கா? - தமிழகம் திரும்பும் 18 எம்.எல்.ஏக்கள்...!

சுருக்கம்

ttv dinakaran mlas will come to tamilnadu

கர்நாடக மாநிலம் குடகில் தங்கியிருக்கும் பதவியிழந்த 18 எம்.எல்.ஏக்கள் வரும் 22 ஆம் தேதி தமிழகம் திரும்புகின்றனர். மேலும் அதற்குள் சசிகலாவை சந்திக்க நேரமும் கேட்டுள்ளனர். 

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற காரணத்திற்காகவும் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். மேலும் எம்.எல்.ஏக்கள் விடுதியை காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

அந்த 18 எம்.எல்.ஏக்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்காமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

இதனால் அவர்கள் எம்.எல்.ஏக்கள் பதவியை வகிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. டிடிவி தரப்பு 18 எம்.எல்.ஏக்களும் தற்போது கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், நாளை மறுநாள் கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளனர். அதற்கு முன்னதாக சசிகலாவை சந்திக்க முடியுமா என 18 பேரும் நேரம் கேட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!
அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!