அய்யப்பன் சன்னதியில் பேசி முடிக்கப்பட்ட கூட்டணி !! அதிரடிக்கு தயாராகும் தினா - அன்புமணி !!

By Selvanayagam PFirst Published Dec 4, 2018, 8:27 AM IST
Highlights

சபரிமலைக்கு மாலை போட்டு அய்யப்பன் கோவில் சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கு வைத்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் உறவினர் ஒருவரை சந்தித்து, வரும் இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்தே பேட்டியிட்டது, ஆனால ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக அதிமுகவுடன் இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என சொல்லியே டாக்டர் ராமதாசும், அன்புமணியும் தேர்தலில் தனித்து நின்றனர்.

ஆனால் தோல்வி அவர்களுக்கு ஒரு பாடத்தைத் கற்றுக்கொடுத்தது. இதையடுத்து அவர்களுக்கான கூட்டணியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பாமக தள்ளப்பட்டது. திமுகவைப் பொறுத்த வரை கூட்டணியில் இடம் தரும் என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அங்குள்ள சில பாமக விரும்பிகள் திமுக – பாமக வை ஒட்ட வைத்துவிட பெரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் இதை உறுதியாக நம்ப முடியாத நிலையே பாமகவுக்கு.

இந்நிலையில் தான். சபரிமலைக்கு அன்புமணி போன சமயத்தில் அங்கே தினகரனின் உறவினர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். சபரிமலை ஏறிய சமயத்தில் இருவரும் கிட்டதட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார்கள்.

அப்போது தினகரனின் உறவினர், ‘யாரோடும் கூட்டணி இல்லை . தனித்துப் போட்டி என்பதில் நீங்க உறுதியாக இருக்கீங்க. அது எந்த மாற்றத்தையும் உருவாக்கிடாது. ஒரு கட்சின்னா ஒரு எம்எல்ஏவாது சட்டமன்றத்தில் இருக்கணும். இப்போ உங்களுக்கு யாரு இருக்கா சொல்லுங்க ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால நீங்க வீண் பிடிவாதத்தை விட்டுட்டு, கூட்டணி பற்றி யோசிக்கணும். அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைக்க உங்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். ஏன்னா அவங்க இரண்டு பேரையும் நீங்க அதிகமாகவே விமர்சனம் செஞ்சுட்டீங்க.

அதனால நீங்க தினகரனோடு சேருங்க. உங்களோட எண்ணங்களுக்கும் தினகரனின் எண்ணங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. இரண்டு பேருமே மாற்றம் கொண்டு வரணும் என்ற நோக்கத்துடன் இருக்கீங்க. அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்கள் தினகரனோடுதான் இருக்காங்க. அதனால இடைத்தேர்தல் தனியாக வந்தாலும் சரி, இல்லை, நாடாளுமன்றத்துடன் சேர்த்து வந்தாலும் சரி... நீங்க தினகரனோடு சேர்ந்து களமிறங்கினால் அது மிகப் பெரிய வெற்றியை தேடித்தரும்  என்று சொல்லியிருக்கிறார்.

இது அன்புமணியை சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் இது நான் மட்டும் எடுக்கும் முடிவு இல்லை. அப்பாகிட்ட பேசணும். நான் ஊருக்குப் போனதும் அவரைப் பார்த்துப் பேசுறேன். அதுக்குப் பிறகு நல்ல தகவலா சொல்றேன் என அன்புமணி கூறியுள்ளார்.

சபரிமலை தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு, சென்னைக்கும் திரும்பிவிட்ட அன்புமணி இன்னும் ராமதாஸை சந்திக்கவில்லை என்றாலும் அமமுகவுட்ன் கூட்டணி என்ற முடிவோடுதான் இருக்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்து டிடிவி – அன்பு டீம் செமையா தேர்தல் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!