தமிழிசையை தூக்கி எறிஞ்சாத்தான் தமிழக பாஜக உருப்படும்… கிழித்து தொங்கவிட்ட காயத்ரி ரகுராம் …

Published : Dec 04, 2018, 06:29 AM IST
தமிழிசையை தூக்கி எறிஞ்சாத்தான் தமிழக பாஜக உருப்படும்… கிழித்து தொங்கவிட்ட  காயத்ரி ரகுராம் …

சுருக்கம்

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடையனுன்னா அதன் தலைவர் தமிழிசையை மாற்ற வேண்டும் என நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகை காயத்ரி ராகுராமிடம்  சென்னையில் நடு இரவில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. சமூக வலை தளங்களில் காயத்ரியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.

ஆனால் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொய்யான என்றும் தான் பாஜகவில் இருப்பதால்தான் சிலர் இது போன்ற அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என  காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்திருந்தார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை என்றும், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழிசை - காயத்ரி ரகுராம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. பேட்டிகளிலும், சமூக வலை தளங்களிலும் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழிசைக்கு பதில் அளித்துள்ள காயத்ரி, தான் பாஜகவில்தான் இருப்பதாகவும், இது கூட பாஜக தலைவருக்கு தெரியிவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழிசையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் தான் அக்கட்சி உருப்படும் என்றும் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு