ஓ.பி.எஸ், ஸ்டாலின் கனவு பலிக்காது - டிடிவி தினகரன் பாய்ச்சல்

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
ஓ.பி.எஸ், ஸ்டாலின் கனவு பலிக்காது - டிடிவி தினகரன் பாய்ச்சல்

சுருக்கம்

ttv dinakaran about stalin ops

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவை தேர்தல் வரும் என்ற ஓ.பி.எஸ் மற்றும் ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 70வது ஆண்டு விழா மற்றும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு திருல்வேலியில் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து மக்களிடம் சந்தேகம் உள்ளது. அவரது மரணம் குறித்து விமர்சிக்க கூடிய அளவிற்கு வந்திருப்பது வெட்கக்கேடான விசயம் என கூறினார்.

மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வரும் நிலையுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ், ஸ்டாலின் கனவு பலிக்காது என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவை தேர்தல் வரும் என்ற ஓ.பி.எஸ் மற்றும் ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது.

முதுகில் குத்துகிற அரசியலால் முன்னுக்கு வர நினைப்போர் பொதுவாழ்வில் நிலைத்ததில்லை.

வாழவைத்த அதிமுகவின் ஆலமர வேரில் அமிலத்தை ஊற்ற நினைக்கும் ஓ.பி.எஸ்க்கு காலம் பதில் சொல்லும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறணியில் சாய்க்கலாம் என நினைக்கிறார்கள்.

எப்போதும் துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!