"மக்கள் நலக்கூட்டணி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்" - அழைக்கிறார் ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
"மக்கள் நலக்கூட்டணி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்" - அழைக்கிறார் ஸ்டாலின்

சுருக்கம்

stalin calls mnk leaders to support dmk

ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்த அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் தாக்குதலில் வீர மரணமடைந்த சங்கர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

மத்திய,மாநில அரசுகள் சங்கரின் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி செய்வதோடு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் திமுக வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படாததால் தான் ரேஷன் கடைகள் முன்பு திமுக சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

இதே போன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆணையர் ஜார்ஜ் தலைமையிலான காவலர்கள்தான் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என குறிப்பிட்ட ஸ்டாலின் ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்,

PREV
click me!

Recommended Stories

Poes Garden: 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?