"மருத்துவர்கள் மீது குறையில்லை.. சசிகலாதான் அப்பல்லோவை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்" - மைத்ரேயன் பகீர்

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
"மருத்துவர்கள் மீது குறையில்லை.. சசிகலாதான் அப்பல்லோவை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்" - மைத்ரேயன் பகீர்

சுருக்கம்

mythreyan talks about jaya death

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது எந்த குறையும் இல்லை எனவும் அப்போலோ மருத்துவமனை சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தது எனவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ் தற்போது அவருக்கு எதிராக பல ஆதாரங்களை திரட்டி கொண்டு வருகிறார். மேலும் மறைமுகமாக சவால் விட்டு வந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நேரடியாகவே சசிகலா தரப்பினரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் சசிகலாவிடம் இருந்து பிரிந்த ஆரம்ப தினம் முதலே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது எனவும், இதுகுறித்து மத்திய அரசு விரைவில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஓ.பி.எஸ் தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் 33 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக மக்கள் மன்றத்திலும் அதிமுக தொண்டர்களிடத்திலும் தனக்கு இருக்கும் ஆதரவை நிருபித்தார் ஓ.பி.எஸ்.

இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி மைத்ரேயன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது எந்த குறையும் இல்லை எனவும் அப்போலோ மருத்துவமனை சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா மருத்துவமனையில் ஜெயலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை எனவும், ஆளுனரை கூட பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார் எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!