சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால் நரியும் நாட்டாமைத் தனம் செய்யும் என்பதை போல அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தில் அமரவைக்கப்பட்ட சில சுயநல நரிகள் கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கும் துரோகம் செய்ததன் விளைவாக அம்மா அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சியும் பறிபோனது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்காக ஜெயலலிதாவின் திட்டங்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தாநளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் அவர்களின் மறைவுக்குப் பிறகு அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சூழச்சிகளையும், சதிகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு 'பீனிக்ஸ் பறவை' போல மீண்டெழுத்தவர் நம் இதயதெய்வம் அம்மா அவர்கள். “தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம்;
தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்” எனக்கூறி, தன் இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகம், பள்ளி மாணவர்கள் மேற்படிப்பில் சிறந்து விளங்க விலையில்லா மடிக்கணினி மற்றும் விலையில்லா மதிவண்டி வழங்கும் திட்டம், சொந்த நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்காக விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் என எண்ணிலடங்கா நாடு போற்றும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியவர் நம் இதயதெய்வம் அம்மா அவர்கள்.
அதிமுகவை கை விட்ட தமாகா... பாஜக கூட்டணியில் இணைய முடிவு.? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஜி.கே.வாசன்
தமிழக மக்களுக்கு துரோகம்
தொடர் சட்டப் போராட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்த பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களையே சாரும். தளராத தன்னம்பிக்கை, நிகரில்லா அரசியல் ஆளுமை, அசாத்திய ஆற்றல் 61601 பன்முகத்தன்மை கொண்ட நம் அம்மா அவர்கள், தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவதற்காக எண்ணற்ற தொலைநோக்கு சிந்தனை கொண்ட திட்டங்களை அமல்படுத்தினார். சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால் நரியும் நாட்டாமைத் தனம் செய்யும் என்பதை போல அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தில் அமரவைக்கப்பட்ட சில சுயநல நரிகள்,
தொலைநோக்குத் திட்டங்களைக் கிடப்பில் போட்டு, செயலிழக்கச் செய்து அம்மா அவர்களுக்கு மட்டுமல்லாது அவர் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கும் துரோகம் செய்ததன் விளைவாக அம்மா அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சியும் பறிபோனது. பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த தீயசக்தியான திமுக, தங்கள் குடும்ப நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டு முடக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
தேனியில் பொதுக்கூட்டம்
“நம் லட்சியம் உயர்வானது; நமது பார்வை தெளிவானது; நமது வெற்றி முடிவானது” என்ற அம்மா அவர்களின் தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப எதிரிகள் மற்றும் துரோகிகளின் சூழ்ச்சிகளை இத்தருணத்தில் நாம் துணிச்சலுடன் முறியடிப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை பதித்து அம்மா அவர்களின் உண்மையான வாரிசுகள் நாம் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் வகையில்,
பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தேனி மாவட்டம், தேனி நகரம் பங்களாமேட்டில் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்” நடைபெற உள்ளது. அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கும் இப்பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம். இதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பும், களப்பணியுமே வெற்றிக்கான தீர்வு என்பதை உணர்ந்து நாமும், நமது இயக்கமும் கொண்டிருக்கும் கொள்கைகளை தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
ஆட்சியை அமைத்தே தீருவோம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை பதிப்பதோடு, தமிழ்நாட்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் எனவும் சபதம் ஏற்றிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்