என்னது.. பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல்லா? எப்படி தெரியுமா? துரை வைகோ சொன்ன தகவல்.!

By vinoth kumar  |  First Published Feb 15, 2024, 8:44 AM IST

தேர்தல் நேரத்தில் எவ்வாறு விழப்புடண் கடமையாற்ற வேண்டும், பூத் கமிட்டிகளில் இருக்கும் தோழர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக துரை வைகோ விவரித்தார். 


அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டது பாஜக என துரை வைகோ கூறியுள்ளார். 

தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு கட்சியாலும் செய்ய முடியாத பல்வேறு பணிகளை, தனியொரு இயக்கமாக வருங்கால தலைமுறைகள் வாழ தமிழகத்தின் வளங்களை பாதுகாத்துத் தந்த வைகோவின் தன்னலமற்ற உழைப்பு இளைஞர்களிடம் நன் மதிப்பைப் கொடுத்து உள்ளது என்பதற்கு  சென்னையில் நடந்த இளையோர் தேர்தல் பயிலரங்க கூட்டமே சாட்சி.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு! பங்காளிக் கட்சி SDPI -வுடன் கூட்டணி வச்சி இருக்காங்க.. அண்ணாமலை.!

முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றிய இளையோர் தேர்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாக  மதிமுகவிற்க்கு நேற்று அமைந்துவிட்டது. துரை வைகோ காண தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் இருந்து வந்து இடத்தை அலங்கரிந்த இளைய தலைமுறையினர் எண்ணிக்கை 2000ஐ கடந்து விட்டது.1996இல் இருந்த கட்சியின் எழுச்சியை நேற்றைய நிகழ்வில் காண முடிந்தது.

கழகத்தின் பொருளாளர் மு.செந்திலதிபன் கருத்துரை நிகழ்வின் சிறப்புமிக்க உரையாக இருந்தது. கழகத்தின் முதன்மை செயலாளர் துரை வைகோ பேசிய பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று தெரிவித்தார். பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார். அதனால் தான் அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன் என்று பேசிய பொழுது இளைஞர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. 

இதையும் படிங்க:  நாதகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்! கைவிட்டு போனது விவசாயி சின்னம்! என்ன செய்ய போகிறார் சீமான்.!

தேர்தல் நேரத்தில் எவ்வாறு விழப்புடண் கடமையாற்ற வேண்டும், பூத் கமிட்டிகளில் இருக்கும் தோழர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக துரை வைகோ விவரித்தார். கூட்டத்தில் இளைஞர்களின் எழுச்சியை கண்ட மூத்த மாவட்ட செயலாளர்கள் முகத்தில் உற்சாகத்தை காண முடிந்தது. நேற்றைய நிகழ்வில் மதிமுகவின் மதுரை சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன்  பேசும் போது எந்த நோக்கத்திற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதோ அது 100% முழுமையாக நிறைவேறிவிட்டது என உணர்ச்சித் ததும்ப பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

click me!