நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய பிரஜா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம் போல நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு! பங்காளிக் கட்சி SDPI -வுடன் கூட்டணி வச்சி இருக்காங்க.. அண்ணாமலை.!
வழக்கம் போல விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அச்சின்னத்தை ஆந்திராவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் கமல்..!
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சென்றாலும் இதுதொடர்பாக உடனே முடிவெடுக்காது. தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என கூற அதிக வாய்ப்புள்ளது. இதனால் வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி உழவன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.