40 தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான திமுக.. இளைஞரணிக்கு உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!

Published : Feb 14, 2024, 11:16 PM IST
40 தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான திமுக.. இளைஞரணிக்கு உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற லட்சியத்தை எட்டுகிற வகையில் அயராது களப்பணியாற்ற வேண்டும் என இளைஞரணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கழகத்தின் இதயத்துடிப்பான திமுக இளைஞரணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்தாண்டு நியமனம் செய்திருந்தோம். 

இந்நிலையில் பொறுப்பேற்றது முதல் அவர்கள் மேற்கொண்ட கழகப் பணிகளை ஆய்வு செய்கின்ற விதமாக இளைஞர் அணியின் மண்டலம் 1-க்கு உட்பட்ட மாவட்ட - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று நேரில் சந்தித்தோம்.

'நீட் விலக்கு நம் இலக்கு', இல்லந்தோறும் இளைஞர் அணி - மாநில மாநாடு - மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றை தனித்தனியாகக் கேட்டறிந்தோம். மினிட் புக் - புகைப்படங்கள் - பத்திரிகை செய்திகள் உள்ளிட்டவற்றை காண்பித்து, தங்களின் பணிகளை அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். 

நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற லட்சியத்தை எட்டுகிற வகையில் அயராது களப்பணியாற்ற நிர்வாகிகளை அறிவுறுத்தினோம்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார்.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..