காதல் திருமணம் திமுக-காங்கிரஸ் போல் இருக்கக் கூடாது.. அண்ணாமலை.!

By vinoth kumar  |  First Published Feb 14, 2024, 3:43 PM IST

மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம்.


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என  அண்ணாமலை கூறியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை: இளைஞர்களுக்கு காதல் தின வாழ்த்துகள். என் திருமணமும் காதல் திருமணம்தான். காதல் திருமணம் திமுக - காங்கிரஸ் போல் இருக்கக்கூடாது. மோடி பாஜக போல் இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைகிறாரா? அவரே சொன்ன விளக்கம்..!

இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் குறையாது. மக்கள் தொகை மட்டுமே கணக்கீடாக இருக்கக்கூடாது என்பதே தமிழக பாஜக கருத்து. யாருக்கும் பாதகமில்லாமல் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும். 

இதையும் படிங்க:  திடீர் டுவிஸ்ட்... எல். முருகன் மீண்டும் எம்.பியாக தேர்வு செய்யப்படுகிறார்.. பட்டியலை வெளியிட்ட பாஜக

ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். கோவை தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இருக்கிற வேலையே பார்க்க முடியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!