அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..! அதிமுகவிற்கு தலைமை யார் என பின்னர் முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்

By Ajmal KhanFirst Published Aug 24, 2022, 4:07 PM IST
Highlights

செய்நன்றி, நம்பிக்கை துரோகம் அருவருக்கத்தக்க ஒரு குணாதிசயம். என எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம், செய் நன்றி மறந்தவர்களுக்கு இறைவன் தடுத்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இந்த முடிவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்கு  சாதகமாக வந்த நிலையில், அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பு இபிஎஸ் நிராகரித்த நிலையில், டிடிவி தினகரன் வரவேற்று இருந்தார். இந்தநிலையில் தஞ்சையில் அமமுக நிர்வாகி திருமண நிகழ்வில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

15 மாதங்களில் 5 வது முறையாக கோவைக்கு வந்துள்ளேன்...! என்ன காரணம் தெரியுமா..? முதலமைச்சர் பேச்சு

ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற  பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் சில மேதாவிகளின் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்து வரமாட்டார்கள் என தெரிவித்தார். அனைவரும் இனக்கமாக செயல்பட்டால்தான் தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற உயரிய நோக்கத்தில் சொல்லி இருக்கிறார்கள் எனவே பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருத்தினால்தான் இவர்கள் சிந்தனை நிறைவேறும் என கூறினார்.

சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்

இந்தியாவில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அ.ம.மு.க ஒரு அணிலை போல் செயல்படுவோம்.ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றுகிற திட்டங்கள் தேர்தல் நேரத்தில்  அறிவிக்கிறார்கள் இது கூடாது என உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறார்கள் அந்த கருத்தை நான் வரவேற்கிறேன், திமுக ஆட்சி மக்களை ஏமாற்றுகிற அரசாக உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பலனை அடைவார்கள். எடப்பாடி பழனிச்சாமியுடன் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. அவரது குணாதிசயம்தான் பிடிக்கவில்லை, அதிமுக அமமுக இணையும் போது ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என நினைப்பீர்களா அல்லது இரட்டை தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்புறம் பார்ப்போம் என்றார். செய்நன்றி, நம்பிக்கை துரோகம் அருவருக்கத்தக்க ஒரு குணாதிசயம். எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம், செய் நன்றி மறந்தவர்களுக்கு இறைவன் தடுத்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு என எடப்பாடி பழனிச்சாமியை  டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கு பள்ளி வேன் கொடுக்க வேண்டும்.? கல்வித்துறை சுற்றறிக்கையா? அண்ணாமலை ஆவேசம்

 

click me!