அதிமுகவுடன் டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணியா? கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Aug 16, 2022, 6:28 AM IST

தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை. இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மரத்தில்  இருந்து உதிர்ந்த இலைகளாகதான் பார்க்கிறோம்.  கூட்டணி குறித்து பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தற்போது வாய்ப்பே இல்லை. 


கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் கூட்டம் நடத்தி அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என முன்னாள் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜகவுடன் டிடிவி.தினகரன் இணைந்து கூட்டணி வைத்தாலும் அதிமுக தனித்தன்மையுடன் இருக்கும். அதிமுக தலைமையை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதைத் தலைமை தான் முடிவு செய்யும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- “திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை. இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மரத்தில்  இருந்து உதிர்ந்த இலைகளாகதான் பார்க்கிறோம்.  கூட்டணி குறித்து பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தற்போது வாய்ப்பே இல்லை. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் கூட்டம் நடத்தி அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.  

இதையும் படிங்க;- தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்

அதிமுக என்று ஓபிஎஸ் கூறி வருவது, அவருக்குத் தான் காலம் வீணாகி வருகிறது. அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.  திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. அதனை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதனை எதிர்கட்சியாக நாங்கள் சுட்டிகாட்டுவோம். அதிமுக ஆட்சியில் அனிதா என்ற மாணவி இறப்பினை வைத்து திமுக அரசியல் செய்தது. அனிதா இறப்பு என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஆனால் இன்றைக்கு 11 மாணவர்கள் இறந்துள்ளார்கள். அவர்களை போன்று இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

click me!