சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
காலையில் இருந்தே விஜயகாந்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். உடன் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர் என கட்சியினர் திரண்டிருந்தனர்.
கேப்டன் விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள் திரைப்படங்களில் பார்த்த கேப்டனா இது ? இவருக்கா இப்படியொரு நிலைமை என கண்ணீர் விட்டனர். இந்த சம்பவம் விஜயகாந்த் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே ! மீண்டும் பரபரப்பு