இது நாட்டிற்கு நல்லது இல்லை.. தேசப்பற்று & அரசியல் இப்படியா இருக்கணும்.. கொதித்த பிடிஆர்

Published : Aug 15, 2022, 08:29 PM IST
இது நாட்டிற்கு நல்லது இல்லை.. தேசப்பற்று & அரசியல் இப்படியா இருக்கணும்.. கொதித்த பிடிஆர்

சுருக்கம்

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. 

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது அவர் காரை மறித்து கார் மீது பாஜகவினர் செருப்பு வீச அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. 

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.   பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகளாக சக்திவாய்ந்த ஜனநாயகமாக இருந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே ! மீண்டும் பரபரப்பு

இதற்கு மூலக்காரணம், தேசப்பற்றையும் அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. ராணுவத்தையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் 75 ஆண்டுகால வரலாறு.நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கெனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை' என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!