டிடிவி.தினகரன் போட்ட அசரவைக்கும் அந்தர் பிளான்... சோகத்தில் இருந்த தொண்டர்கள் உற்சாகம்..!

Published : Aug 29, 2019, 02:42 PM ISTUpdated : Aug 29, 2019, 02:44 PM IST
டிடிவி.தினகரன் போட்ட அசரவைக்கும் அந்தர் பிளான்... சோகத்தில் இருந்த தொண்டர்கள் உற்சாகம்..!

சுருக்கம்

நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் பெற்ற வாக்குகளை வைத்து டிடிவி.தினகரன் புதிய திட்டத்தை வகுத்துள்ளார். இதனால், சோகத்தில் இருந்த அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் பெற்ற வாக்குகளை வைத்து டிடிவி.தினகரன் புதிய திட்டத்தை வகுத்துள்ளார். இதனால், சோகத்தில் இருந்த அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் பெற்ற வாக்குகளை வைத்து கணக்கு போட்டுள்ளனர். அதில், தினகரனின் அமமுக கட்சி எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகள் மீது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்த உள்ளார். 

அந்த வகையில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கணக்கில் எடுத்துள்ளனர்  இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதனால், மீண்டும் அமமுக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!