கராத்தே தியாகராஜனை தூண்டிவிடுகிறாரா ரஜினி..?? அரசியல் அரங்கில் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Aug 29, 2019, 12:03 PM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து நேரடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக எதிர்த்து வருகிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் தான் தனது பதவி பறி போனதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட்டு தேவையில்லாத வேலைகளை திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார் என அதிரடியாக குற்றம்சாட்டினார் கராத்தே தியாகராஜன்.

.

திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து நேரடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக எதிர்த்து வருகிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் தான் தனது பதவி பறி போனதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட்டு தேவையில்லாத வேலைகளை திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார் என அதிரடியாக குற்றம்சாட்டினார் கராத்தே தியாகராஜன். 

.அதிரடி அரசியலுக்கு பெயர்போன கராத்தே தியாகராஜன் சென்னை மாநகர துணை மேயராக இருந்தபோது சசிகலா ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்தவர் ஆவார். அல்வா கொடுத்தால் சும்மா இருப்பார்களா சசிகலாவும் ஜெயலலிதாவும் பிடித்து சிறையில் போடுவதற்கும் அவர் மீதான கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை தூசிதட்டி விசாரணையை துரிதப்படுத்தினர். ஆனால், அவர்கள் அவர்களின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டி நாட்டை விட்டு தப்பிச் சென்று மீண்டும் சாதுரியமாக தமிழகத்திற்குள் வந்தார் அந்த அளவிற்கு அரசியல் அனுபவம் பெற்றவர் இந்த கராத்தே தியாகராஜன்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படும் முன்புவரை கராத்தே தியாகராஜன் சிதம்பரத்தின் ஆதரவாளராகவும் தென்சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் ஆவார். சிதம்பரத்தின் செல்வாக்கை மீறி திமுக ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் ராகுல்காந்தி இந்த நடவடிக்கையை எடுத்ததாக உறுதியாக நம்புகிறார் கராத்தே தியாகராஜன். அதற்காக ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலைகளை ஏற்கனவே அவர் தொடங்கிவிட்டார்.

 

ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனமாக இருக்கப்போகும் ரஜினிகாந்த் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்க அந்த ரஜினிகாந்துக்கு ஐடியாக்களை அள்ளி விடுபவர் ஆக கராத்தே தியாகராஜன் இருக்கிறார் என்பதுதான் திமுக மேலிடம் காங்கிரஸ் மேலிடத்திடம் அளித்த புகாரின் சாராம்சம் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த நிலையில்தான் தொடர்ந்து பேட்டிகள் மூலம் எதிர்த்து வந்த கராத்தே தியாகராஜன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அறிக்கையின் மூலம் எதிர்க்க தொடங்கியுள்ளார்.

அதாவது எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா போன சர்ச்சை ஒருபுறம் இருக்க இவர் மட்டும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கருணாநிதிக்கு தெரியாமலேயே சென்றார் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். கராத்தே தியாகராஜன் இந்த அதிரடி அறிக்கை திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பி உள்ளது இது ஒருபுறமிருக்க கராத்தே தியாகராஜன் அறிக்கையைப் பார்த்த ஸ்டாலினின் அனுதாபிகள் மற்றும் திமுகவினர் அவரை ரஜினிகாந்த் தரப்பினர் தான் தூண்டிவிட்டு குளிர்காய கின்றனர் என தெரிவிக்கின்றனர் அரசியலுக்கு வராத ரஜினி காந்தை அரசியலுக்கு இழுப்பது போல ஆங்காங்கே பேசிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!