எடப்பாடி வெளிநாடு பயணம்...! திடீரென டப் கொடுத்த அமைச்சர்...! பெருகும் ஆதரவு...!!!

By Asianet TamilFirst Published Aug 29, 2019, 1:06 PM IST
Highlights

3 சதவிகித பள்ளிகள் மட்டுமே தனியாரால் நிர்வகிக்கப்படும் நிலையில்  மீதமுள்ள 97 சதவிகித பள்ளிகள் முழுவதுமான அரசே நிர்வகித்து செயல்படுத்தி வருகிறது, எனவே முறையே அறிந்து, அதை போல் தமிழகத்திலும் செய்ய முடியுமா என்பது குறித்தும் அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் அறிந்து வர சென்றுள்ளார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பின்லாந்து நாட்டிற்கு டூர் அடித்துள்ளார் இது , முதல்வருக்கு டப் கொடுக்கும் வகையில் உள்ளது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, லண்டன், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை அவர் அங்கு சந்தித்து பேச உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் பல்வேறு விமர்சனங்களையும் ஆதரவு குரல்களையும் எழுப்பியுள்ளது,  முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் தொடர்பான கருத்துக்கள் வலைதளங்களை பரபரப்பாகி உள்ளது இந் நிலையில் அவருக்கு இணையாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையணின் பின்லாந்து சுற்றுப்பயணமும் ட்ரெண்டாகி வருகிறது. 
7 நாட்கள் அரசு முறை பயணமாக அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டிற்கு  பயணம் மேற்கொண்டுள்ளார். 

கல்வி முறையில் உலகிலேயே பின்லாந்து தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் அவர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பள்ளிக் கல்விமுறையை அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். பின்லாந்தில்  3 சதவிகித பள்ளிகள் மட்டுமே தனியாரால் நிர்வகிக்கப்படும் நிலையில்  மீதமுள்ள 97 சதவிகித பள்ளிகள் முழுவதுமான அரசே நிர்வகித்து செயல்படுத்தி வருகிறது, எனவே முறையே அறிந்து, அதை போல் தமிழகத்திலும் செய்ய முடியுமா என்பது குறித்தும் அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் அறிந்து வர சென்றுள்ளார் என்ற தகவலால் செங்கோட்டையன் முதல்வரை எடப்பாடிக்கு டப் கொடுத்திருக்கிறார். 
 

click me!