இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.! - டிடிவி தினகரன் ஆவேசம்

Published : Mar 15, 2023, 01:13 PM IST
 இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.! - டிடிவி தினகரன் ஆவேசம்

சுருக்கம்

இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இரட்டை இலை இருந்தும் அவர்களால் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லையென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக 6 ஆம் ஆண்டு விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கி 5 ஆண்டு முடிவடைந்து 6 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால்  கட்டிக்காக்கப்பட்ட அதிமுக இன்று  துரோகத்தின் கையில் சிக்குண்ட காரணத்தால் வீருகொண்டெழுந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் எழுச்சிமிகு எண்ணத்தின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார். 5 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளோம், வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான் என தெரிவித்தார். 

குவியும் புகார்..! நெல்லை மேயர் மாற்றமா.? அமைச்சர் கே .என் நேரு பரபரப்பு தகவல்

துரோகிகள் கையில் அதிமுக

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் தொண்டர்கள். டெண்டர்களுக்காக வந்தவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என விமர்சித்தார். எந்த ஒரு பின்னடைவும் அமமுகவை பாதித்து விடாது. அமமுக சுயநலத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல, 5 ஆண்டுகளில் அமமுக அமைப்பு ரீதியாக அனைத்து இடங்களிலும் காலூன்றியுள்ளது.  இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இரட்டை இலை இருந்தும் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஆட்சியையும் தக்க வைக்க முடியவில்லை என தெரிவித்தவர், தீய சக்தியான திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்துவிட்டார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.  ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்த உறுதிமொழி ஏற்போம் என தெரிவித்தார். 

அமமுக ஆரம்பித்தது ஏன்.?

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  டிடிவி தினகரன், ஆர் கே நகர் தேர்தலை தவிர பெரிய வெற்றி நாங்கள் பெறவில்லை, அதிமுகவை மீட்பேன் என சொன்னவர்கள் ஏன் அமமுக ஆரம்பித்தேன் என கேட்கிறார்கள், அதிமுகவை ஜனநாயக ரீதியாக மீட்க தான் அமமுகவை தொடங்கினேன் பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது அனைவடுக்கும் தெரியும் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

பலவீனப்பட்டு வரும் அதிமுக..! வழக்குகளுக்கு பயந்து தீய சக்திகளிடம் சமரசம் செய்த துரோகிகள்-டிடிவி தினகரன் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!