குவியும் புகார்..! நெல்லை மேயர் மாற்றமா.? அமைச்சர் கே .என் நேரு பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Mar 15, 2023, 11:33 AM IST

 நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் அந்த மாநகராட்சியின் மேயரை மாற்ற வேண்டும் என கூறும் விவகாரம் தொடர்பாக சுமூக தீர்வு காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் அதை பேசித்தீர்ப்போம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


மேயருக்கு எதிராக  புகார்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், மற்ற 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. இதையடுத்து தி.மு.க. பெரும்பான்மை வெற்றியோடு மாநகராட்சியை கைப்பற்றி, தற்போது நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மேயர் சரவணனுக்கு எதிராக திமுக  கவுன்சிலர்களே புகார் தெரிவித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

BREAKING: எங்க தலைவரு காரையே வழி மறைக்கிறீங்களா! திருச்சி சிவா வீட்டை அடித்து நொறுக்கிய நேருவின் ஆதரவாளர்கள்?

கமிஷன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

இந்தநிலையில் கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ரவீந்திரன், மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு  பிரச்னைகளைத் தீர்க்கவேண்டிய மேயர் சரவணன், அறைக்குள் தி.மு.க மாநகரச் செயலாளர் சுப்ரமணியன், தி.மு.க பகுதிச் செயலாளர் செல்லத்துரை ஆகியோரை மணிக்கணக்கில் அமரவைத்து ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மற்ற  கவுன்சிலர்கள்கூட மேயரைச் சந்திக்க முடிவதில்லை என தெரிவித்தார். இதே போல நெல்லை மாநகராட்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பணமோசடி மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் மற்ற திமுக கவுன்சிலர்கள் தெரிவித்து இருந்தனர்..

நேருவை சந்தித்த கவுன்சிலர்கள்

இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை திருச்சியில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.இதனையடுத்து திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் குழுமிக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் தொடர்ந்து. கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிதிட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.  

சுமூக தீர்வு காணப்படும்

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ராஜா காலனியில் ரூ.15.50 லட்சம் செலவில் பொதுமக்கள் உருவாக்கிய இறகு பந்து மைதானதம் இன்று திறக்கப்பட்டது. சென்னையில் மழை காலங்களில் தொடங்கப்பட்ட சில பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் செயலர் முடிக்கப்படாத பணிகள் குறித்து கூறியுள்ளார். எனவே முதல்வரும் அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.  நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் அந்த மாநகராட்சியின் மேயரை மாற்ற வேண்டும் என கூறும் விவகாரம் தொடர்பாக சுமூக தீர்வு காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் அதை பேசித்தீர்ப்போம் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லாமல், அழிவு பாதையில் செல்லும் ஆவின்..! திமுக அரசை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

click me!