அதிமுகவை பலவீனப்படுத்தியதே ஓபிஎஸ்,ஈபிஎஸ் தான்..! டிடிவி தினகரன் திடீர் பாய்ச்சல்

Published : Nov 27, 2022, 03:33 PM IST
அதிமுகவை பலவீனப்படுத்தியதே ஓபிஎஸ்,ஈபிஎஸ் தான்..! டிடிவி தினகரன் திடீர் பாய்ச்சல்

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ஒரு போதும் இணையமாட்டேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

கட்சியின் கொள்கையை பின்பற்றுகிறோம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்த கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  சென்னை இராயப்பேட்டையில் அமமுக தலைமைக் கழகத்தில் நடைப்பெற்றது. அப்போது நடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு, சுயநினைவு தவறிய நிலையில் இருப்பது போன்ற மனிதரின் பேச்சிற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்சியின் லட்சியங்களையும், கொள்கையையும் பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்று கூறினார்.

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி

ஓரணியில் திரள வேண்டும்

இவை எல்லாம் பயத்தினால் செய்யும் நடவடிக்கை அதனால் அதனை பெரிது படுத்த வேண்டாம். அம்மாவின் கொள்கையை பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.  எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வாருங்கள் என அழைக்கிப்பதாகவும் தெரிவித்தார்.  இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்.  அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம் என கூறினார்.

உண்மையை மறைத்து பொய்யை மட்டும் கூறும் பொம்மை முதலமைச்சர்..! மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் ஆர்.பி.உதயகுமார்

மக்களின் ஆதரவு தேவை

திமுக தலைமையிலான கூட்டணி 2019 -21 வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இன்று திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். அதிக கட்சிகளுடன் கூட்டணி இருந்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலம் இழந்து வருவதாகவும் தெரிவித்தார். எடப்பாடி தலைமையில் கூட்டணி பலம் இழந்து உள்ளது. கட்சி இருக்கிறது என்று காட்டி கொள்ள செய்வதாக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக கூறினார். பழனிசாமி தலைமையில் டுபாக்கூர் அணியில் நான் இணைய வாய்ப்பே இல்லை என கூறினார். 

இதையும் படியுங்கள்

அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!