அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்

By Ajmal Khan  |  First Published Nov 27, 2022, 2:07 PM IST

உதயநிதி அமைச்சராவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர், அது நடந்தால் நல்லது  அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சி

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் முன்னிட்டு  அத்தொகுதி சார்பாக  மாபெரும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதியின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதிலும் பெரிய அளவில் அமர்க்களம் ஆரவாரம் ஏதும் இல்லாமல் ஏழை மக்கள் பயன்படுகிற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

திமுக மாணவர் அணித்தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் நியமனம்... அறிவிப்பு வெளியிட்டது தலைமைக் கழகம்!!

உதயநிதி அமைச்சர் ஆகிறாரா.?

அடுத்த பிறந்தநாளில்  அமைச்சராக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடுவது நடந்தால் நல்லது,  அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம். அமைச்சராகவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர் உதயநிதி எனவும் கூறினார். திமுக இளைஞர் அணி அமைப்பு என்பது  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம். ஏறத்தாழ  30 லட்சம் இளைஞர்கள்  இந்த அணியில்  உள்ளடங்கி இருக்கிறார்கள்.  திமுக இளைஞரணி சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல எனவும் சமூகத்திற்கான அமைப்பு எனவும்  1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  திமுக இளைஞரணி  கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறினார். 10 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி இருக்கிற உயிரோட்டமான அமைப்பு இது, நல்ல தலைவராக உதயநிதி இருப்பதால் அவர் எல்லா தகுதிகளுக்கும் ஏற்புடையவர் என கூறினார். 

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி

கொரோனா கட்டுப்பாடு நீக்கம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சர்வதேச விமானங்களில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வாரம் அனைத்து விமானங்களிலும் குறிப்பாக இந்திய விமானங்களில் பயணிக்கிற பயனாளிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் கட்டாய கொரோனா பரிசோதனை யில் இருந்தும் விலக்கு கிடைக்கும் எனவும் கூறினார். சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட மற்ற நாடுகளில் கொரோனா முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயல்வதா.? கேரளா அரசுக்கு எதிராக களமிறங்கும் ராமதாஸ்

click me!