உண்மையை மறைத்து பொய்யை மட்டும் கூறும் பொம்மை முதலமைச்சர்..! மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Nov 27, 2022, 12:25 PM IST
Highlights

புள்ளி விவரங்களை அப்படியே  வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடியார்  சொல்லுவது உண்மையிலும் உண்மை என்பது நிருபணம்  ஆகியுள்ளது முன்னாள் முதலமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

மாற்றுத்திறனாளிகள் துறை திட்டம்

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்த்திட, எடப்பாடியார் தலைமையிலான  அம்மாவின் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண சலுகை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திமுக அரசை விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்தி பரப்புகிறது... பாஜக மீது மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!!

கருப்பு தினம்- மாற்றுத்திறனாளிகள்

இன்றைக்கு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் அவர் தெரிவித்த  புள்ளி விவரங்கள் தவறானது என்பதனால் மாற்றுத்திறனாளின் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என தேசிய பார்வையற்றோர் இணைய கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை இன்றைக்கு அனைத்து பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதிலே கடும் ஊனமடைந்தவர்களுக்கான 1,500 ரூபாய் உதவித்தொகை மட்டுமே,2000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிறருக்கு உயர்த்தப்படவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உயர்வு வழங்கப்படவில்லை.  தமிழக அரசு 2 லட்சம் பேருக்கு உதவி தொகை உயர்த்தப்பட்டதாக கூறியதும் தவறானது. கடும் ஊனம் அடைந்த 15 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

உலக மாற்றுத்திறனாளி தினம்

ஆகவே இது ஒரு தவறான புள்ளி விவரத்தை முதலில் தெரிவித்த காரணத்தினால், பொதுமக்களுக்கு தவறான தகவல் கொடுப்பது எங்கள் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும் என்கிற காரணத்தினாலே, எங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் என்று மாற்றுத்திறனாளிகள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத வேலைவாய்ப்பினை எடப்பாடியார் கொண்டு வந்ததை  இந்த அரசு அதை செயல்படுத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை கருத்திலே கொண்டு டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என்று அவர்கள் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

பொம்மை முதலமைச்சர்

ஆகவே இன்றைக்கு தூங்குகிறவரை எழுப்பலாம் .ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்கிற அந்த அடிப்படையிலே, இந்த அரசு தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும்  அறிக்கை கொடுத்து இன்றைக்கு இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் கூட ஆனால் இந்த அரசு தூங்குவதை போல் நடித்துக் கொண்டிருக்கிறது.  மிக விரைவிலே இந்த நாட்டு மக்கள் இந்த தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தக்க பாடம் புகட்டுகிற நாள் வெகு தொலைவில் இல்லை. இன்றைக்கு முதலமைச்சருக்கு கொடுக்கப்படுகிற புள்ளி விவரங்கள் அதை அப்படியே அவர் வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடியார்  சொல்லுவது உண்மையிலும் உண்மை என்பது ஆகியுள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்... வைகோ அதிரடி கருத்து!!

click me!