
ஜெயலலிதா இடத்தை நிரப்ப ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து ஆர்.கே.நகரில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், " இரட்டை இலை சின்னம் முடக்க யார் காரணம் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். மறை்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவ்வாறு தேர்தல் பரப்புரையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் இடத்தை டிடிவியால் நிரப்ப முடியும் என்ற முதல் அமைச்சரின் பிரசாரம் அதிமுக அம்மா கட்சிக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.