எ.வ.வேலு குறித்த பிரதமர் மோடியின் பேச்சை நீக்கனும்..! மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர் பாலு ஆதாரத்துடன் கடிதம்

By Ajmal Khan  |  First Published Aug 11, 2023, 2:36 PM IST

எ.வ.வேலு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வீடியோ ஆதாரத்துடன் டி.ஆர்.பாலு சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 


உளவு அமைப்புகளின் செயல்பாடு

இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா? என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்தி மோடி விமர்சித்து பேசியிருந்தனர்.  இது தொடர்பாக அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில், எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது,

Tap to resize

Latest Videos

யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.

அரசியல் விளம்பரத்திற்கான செயல்

நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும் வேதனையும் படுகிறேன் என தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து  திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டிஆர்.பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மக்களவையில் 9 மற்றும் 10  ஆகிய தேதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பதிலின் போது, ​

அவைக்குறிப்பில் இருந்து நீக்கிடுக

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்தி மோடி ஆகியோர் கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அந்த கடிதத்தில் டி.ஆர். பாலு  கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தோடு அமைச்சர் எ. வ, வேலு பேசிய காட்சிகளையும் அனுப்பிவைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நான் பேசியதைத்தான் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் திரித்து கூறுகிறார்கள் - எ.வ.வேலு விளக்கம்!

click me!