நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது மோடியும், நிர்மலா சீதாராமனும் திமுகவின் ஊழல்களை கிழி கிழி என கிழித்துள்ளார்கள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு அவமானம்
மாலை முரசு நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதி மாலை முரசு அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 89 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மார்ச் 25ஆம் தேதியில் அம்மாவின் சேலையை பிரித்து இழுத்து எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி கேவலப்படுத்தி இருப்பதை நாட்டு மக்கள் என்றும் மறந்துவிட முடியாது.
undefined
அதற்க்கு தக்க பாடம் புகட்டுவதற்காக மீண்டும் சட்டமன்றத்தில் முதலமைச்சராக வந்து பெரிய அளவுக்கு சாதனையை அம்மா படைத்தார். பெண் என்றும் பாராமல் அவமரியாதை படுத்தி பெண்மை இழிவு படுத்திய திமுக அரசுக்கு அன்றைக்கே பாடம் கொடுத்தவர் அம்மா. எப்போதும் திமுகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என கூறினார்.
திமுகவை விமர்சித்த மோடி
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது மோடி அவர்களும் நிர்மலா சீதாராமனும் திமுகவை கிழி கிழி என கிழித்துள்ளார்கள். திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கான கொள்ளை அடித்ததை பிரதமர் பாராளுமன்றத்தில் பேசியது தமிழ்நாடு அளவில் உலக புகழ் பெற்ற ஊழல் அரசு பற்றி திமுகவை பற்றி கிழித்து தொங்கவிட்டுள்ளார். நிர்மலா சீதாராம் திமுகவை குறித்தும் துரைமுருகனை குறித்தும் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது எனவும் தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில் இந்திய அளவில் பிரதமர் மோடி திமுக குறித்து விமர்சனம் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.
இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை
கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்பது ஏற்புடையதல்ல. இன்று தமிழகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி நிற்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரை வாய் சவடால் தான் செயலில் ஒன்றும் கிடையாது எனவும் இந்த அரசுக்கு திறமை இல்லை வாய் தான் உள்ளது என விமர்சிதார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், தமிழ்நாட்டில் இந்தி சமஸ்கிருதம் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் கூறியது அவரது கருத்து. இந்தி, சமஸ்கிருதம் எந்த விதத்திலும் நுழையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. எங்களுடைய கருத்தை பொருத்தவரை இந்தியை தமிழகத்தில் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் இந்தியை எந்த வடிவிலும் நுழைய அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு ஒரு சீட் கூட வராது..! அடித்து கூறும் எஸ்.வி.சேகர்