மது வாங்கித்தரச்சொல்லி டார்ச்சர்.. கட்டையால் அடித்தே கொன்ற நண்பன்.. சென்னையில் பயங்கரம்.

Published : Jun 28, 2021, 01:09 PM IST
மது வாங்கித்தரச்சொல்லி டார்ச்சர்.. கட்டையால் அடித்தே கொன்ற நண்பன்.. சென்னையில் பயங்கரம்.

சுருக்கம்

மது வாங்கித்தராததால் தாக்கிய  நண்பனை கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (55).  

மது வாங்கித்தராததால் தாக்கிய  நண்பனை கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் நேற்று நள்ளிரவு அம்பத்தூர் ரவுண்ட் பில்டிங் அருகில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆறுமுகம் தனது குடும்பத்தை பிரிந்து பிளாட்பாரத்தில் தங்கி குப்பைகளை பொறுக்கி விற்று வந்துள்ளார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் வயது (39) என்பவரும் குப்பைகளை பொறுக்கி விற்று ஆறுமுகத்துடன் தங்கி வந்துள்ளார். 

பின்னர் இருவரும் நண்பர்களாயினர். இந்நிலையில் ஆறுமுகம் குடிக்க மது வாங்கி தரச் சொல்லி தன்னை தொந்தரவு செய்து கட்டையால் தாக்கியதால் வலி தாங்க முடியாமல் ஆறுமுகத்தை கடையால் திருப்பி தாக்கியதில், அதில் இருந்த ஆணி அவரது தலையில் குத்தியதில் ஆறுமுகம் மயங்கி விழுந்ததாகவும், அதில் அவர் மருத்துவமனையில் அனும தித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஜெ.ஜெ நகர் போலீசார் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!