தலைமையேற்க வாங்க சின்னம்மா.. சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் தீர்மானம்.. கதிலங்கிபோன எடப்பாடியார்..!

Published : Jun 28, 2021, 12:29 PM IST
தலைமையேற்க வாங்க சின்னம்மா.. சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் தீர்மானம்.. கதிலங்கிபோன எடப்பாடியார்..!

சுருக்கம்

அதிமுக ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக சசிகலா உடன் உரையாடி வரும் அதிமுக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு  நீக்கி வருவதை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில், விளாத்திகுளத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது தினமும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் நாள்தோறும் வெளியாகி அரசியல் அரங்கை அதிர வைத்து வருகிறது. சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தாலும் கூட அதிமுகவினர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் பல இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலர் ராமசாமிபாண்டியன், ஜெயலலிதா பேரவை நகர செயலர் பொன்ராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

கூட்டத்தில் அஇஅதிமுகவுக்கு பொதுச்செயலராக சசிகலா தொடர வேண்டும். பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் கிளைக் கழக நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக சில பேரை மட்டும் கூட்டி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும்,  அதிமுக ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக சசிகலா உடன் உரையாடி வரும் அதிமுக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு  நீக்கி வருவதை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலா, மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்தித்து தொண்டர்களின் கட்சிதான் அதிமுக என்பதை வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். கழகம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஓரணியில் திரளும் நோக்குடன் தொண்டர்களை நோக்கி சந்திப்பு பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலாவின் வருகையை இக்கூட்டம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை