தமிழ்நாட்டிலேயே அதில் நெம்பர் ஒன் இடம் பிடித்தது உதயநிதியின் தொகுதிதான்.. மார்தட்டும் மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Jun 28, 2021, 12:18 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமசணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமசணியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி துவங்கி வைத்தார்.அதில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், 

10 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணி நிறைவடையும் எனவும், தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்ற தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது என்றும், 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது எனவும், தடுப்பூசி இல்லை என காலை முதல் செய்திகள் வந்து கொண்டுள்ளதாகவும், தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான் என்றும் இன்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் என்றும் தெரிவித்துள்ளார். 

விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், கொரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு  தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும், வழக்கறிஞர்கள் இறந்து போன குடும்பங்களுக்கு பெரும் உதவிசெய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

click me!