இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்…..யாருக்கு  வெற்றி வாய்ப்பு ?

Asianet News Tamil  
Published : Aug 05, 2017, 06:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்…..யாருக்கு  வெற்றி வாய்ப்பு ?

சுருக்கம்

today vice president election

இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்…..யாருக்கு  வெற்றி வாய்ப்பு ?

குடியரசுத் துணைத் தலைவர்  தேர்தல் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு டுடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்ந்து 2-வது முறையாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியை வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இதில் ஆளும் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க  முடியும் என்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பின்னர் மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 மணியளவில் முடிவு அறிவிக்கப்படும். தேர்தலில் பதிவாகும் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் பாதிக்கு மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

இந்த தேர்தலில் வெங்கய்யா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!