
கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் வளர்ச்சி பொருக்கமுடியாத முதலமைச்சர் சீதாராமையா தூண்டுதலின் பேரில் தான் ரெய்டு நடப்பதாக அமைச்சரின் தயார் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பாஜவினரின் குதிரை பேரத்தை தவிர்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடகத்திற்கு அழைத்து வந்து சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமான இருந்தவர் கர்நாடக அமைச்சர் சிவக்குமார்.
இதனால் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சரின் தங்கை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 10 கோடிரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சரின் தயார் கௌரம்மா திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் சிவக்குமாரை நம்பி பல்வேறு பொறுப்புக்களை வழங்கியுள்ளதை பொருக்கமுடியாத முதலமைச்சர் சீதாராமையா வருமான வரி துறையை ஏவி விட்டு ரெய்டு நடத்தியதாக கூறினார்.
எந்தவித ரெய்டுகளை நடத்தினாலும் அமைச்சர் சிவக்குமாரை ஒன்றும் அசைக்க முடியாது என்று அவர் சவால் விடுத்துள்ளார்.