
அதிமுக அணிகளை டிடிவி தினகரன் இணைப்பார் என்றும், அதிமுக தலைமையகம் செல்வதை தடுக்க முடியாது என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ. வெற்றிவேல், சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையகம் செல்வதை, போலீஸ் தடுக்க முடியாது என்று கூறினார். எங்களைத் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்தான் ஆணையத்தால் முடிவெடுக்க முடியும், அதிமுக பொது செயலாளர் விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று கூறினார்.
அவகாசம் கொடுத்தும் இரு அணிகளும் இணையாததால்தான் டிடிவி தினகரன் இணைக்க வருகிறார். கட்சியும், ஆட்சியும் எங்களுடையதுதான்.
அமைச்சர் ஜெயக்குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் DYFI இயக்கத்தில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். ஜெயக்குமாரின் குடும்பத்தினர் பலர் திமுகவுல் சேர்ந்துள்ளனர். ஜெயக்குமாரின் கட்சியும் ஆட்சியும் பறிக்கப்படுவது உறுதி.
தினகரனை கைது செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறுவதில் உண்மையில்லை என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.